Wednesday 28 September 2016

திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் திரு சகோதரர்கள்


திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் திரு சகோதரர்கள்...நாள் 22.09.2016




Sunday 25 September 2016

கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நூல்

கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நூல்


கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நூல் வெளியீட்டு விழா...இடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் குமாரபாளையம் 22.09.2016


கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும்  கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நூல் வெளியீட்டு விழா...இடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் குமாரபாளையம் 22.09.2016




















Friday 23 September 2016

கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நூல் வெளியீட்டு விழாவில்...

கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும்  கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நூல் வெளியீட்டு விழாவில்...





Saturday 17 September 2016

திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர் . செ.ராசு அவர்கள் உரை


கோவை திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர் . செ.ராசு அவர்கள் உரை


23.09.2014 திருக்குறள் கல்வெட்டுக் கருத்தரங்கில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள்


23.09.2014 திருக்குறள் கல்வெட்டுக் கருத்தரங்கில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள்


Monday 12 September 2016

அடுத்தடுத்த குறள்களை கல்வெட்டிலே பதிப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன...


அடுத்தடுத்த குறள்களை கல்வெட்டிலே பதிப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன...


Sunday 11 September 2016

திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்க விழா மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


திருக்குறள் கல்வெட்டு விழா அழைப்பிதழ்

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களோடு மலையிலே கல்வெட்டுகளாக்கவேண்டும் என்று குறள் மலைச் சங்கம் அமைப்புகள் சார்பாக பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், என பல நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திவருகிறது. அரசுக்கு மனு அளித்தது முதல் மலையைத் தேர்ந்தெடுத்ததுவரை, சுமார் 15 ஆண்டுகளாகத் தொடர்பணியில் ஈடுபட்டுவருகிறோம். மாதிரிக்கல்வெட்டுகள் அமைத்தோம். மாவட்ட ஆட்சியர்களும், அரசு உயரதிகாரிகளும் ஆய்வு செய்துமுடித்தபின், நமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஒப்புதல் அளித்தார்கள். தொடர்ந்து முதல் குறளை மலையிலே கல்வெட்டிலே செதுக்கி, விண்ணிலிருந்து நம்மை வாழ்த்தும் அய்யன் திருவள்ளுவனுக்கு சமர்ப்பித்தோம்.
முதல் குறள் செய்திகள்
சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள மலையப்பாளையத்தில் உள்ள மலையில் கல்வெட்டில் முதல் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. இதன் அரங்கேற்ற விழா 03.07.2016 அன்று நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் தலைமை தாங்கினார். குறள்மலைச்சங்கத்தின் சார்பாக நாம் அனைவரையும் வரவேற்றோம். சென்னை வி.ஜி.பி. தலைவர் வி.ஜி.சந்தோஷம் முன்னிலை வகித்தார். விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் பெங்களூரின் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து வைத்து பேசினார்.
அப்போது அவர், “திருக்குறளை கல்வெட்டில் பதிப்பதை, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நாள் இந்த நாள் ஆகும். திருக்குறளை தினமும் படிக்க வேண்டும். அதை புரிந்து கொண்டு, அதன்படி நாம் வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கு திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், மனதிலும் பதிய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். கற்றவர்கள் படித்து முடித்து விட்டு முடங்கி கிடக்க கூடாது. அவர்கள் மேல்நிலைக்கு வர வேண்டும். எப்படி கற்க வேண்டும் என்பதை கற்க கசடற கற்றப்பின் நிற்க அதற்கு தக என்ற குறளில் கூறப்பட்டுள்ளது. நாம் வாழ்க்கையில் இசைப்பட வாழ வேண்டும் . இசைபட வாழ வேண்டும் என்பது, பிறர் வசைப்படாமல் வாழ்வதாகும். செவ்வாய் கிரகம் ஒவ்வொரு வினாடியும் 39 கிலோ மீட்டர் கடந்து செல்கிறது. அதை அடைய மங்கல்யான் சென்றது. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் செல்வதற்கு 8 முதல் 9 மாதங்கள் ஆகும். இதற்கான முயற்சியில் சிறு பிழை ஏற்பட்டால் கூட, சிறிய காலதாதம் ஆனால் கூட அதை அடைவதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து விடும். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதற்கு அமெரிக்கா 5 முறை முயற்சி செய்து, 6 வது முறை வெற்றி பெற்றது. ரஷ்யா 9வது முறைதான் வெற்றி பெற்றது. சீனா, ஜப்பானால் ஜெயிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் மங்கல்யான் விண்கலத்தை அ ப்ப முயற்சி செய்த போது, இந்தியா எப்படி ஜெயிக்க போகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்தியா மங்கல்யான் விண்கலத்தை அனுப்புவதற்கு முன், தோல்வியுற்ற நாடுகள் எல்லாம் எதனால் தோல்வியுற்றன என்ற காரணத்தை கண்டுபிடித்து, அதை சரி செய்ததால் தான் முதன் முயற்சியிலேயே செவ்வாய்கிரகத்திற்கு மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக சென்று சேர்ந்தது. ஒவ்வொரு தோல்வியும் தான் வெற்றிக்கு முதல்படி. அதற்காக தோல்வி அடைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற அவசியம் இல்லை. மற்றவர்களின் தோல்வியை நாம் பாடமாக எடுத்து கொண்டால், அது நமக்குவெற்றியை கொடுக்கும்” என்று பேசினார். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது: திருக்குறள் ஓலைச்சுவடியில் இருந்து, பேப்பர் அதன் பின்னர் கம்ப்யூட்டர் என்று மாற்றுவடிவத்தை பெற்றுள்ளது. உலகபொதுமறையான திருக்குறளை கல்வெட்டில் பதிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை அரசு, தன்னார்வலர்கள், பொதுமக்கள் செய்ய முன்வந்தால், திருக்குறளை அடுத்த தலைமுறையினரிடமும் பதிவு செய்யலாம் என்றார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும் போது, ஒவ்வொருவரும் திருக்குறளை மனதில் கொண்டு வாழ்ந்தால் மாமனிதனாக வாழலாம் என்றார். விழாவில் கவிஞர் கவிதாசன், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு பயிலகத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணியம், குமாரபாளையம் எஸ்.எஸ்.மதிவாணன் பேராசிரியர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இப்போது அடுத்தடுத்த குறள்களைப் பொறிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்பொருட்டு, கல்வெட்டில் திருக்குறள் பாகம் 1 என்ற நூல் கோவையில் கே.எம்.சி.எச்.நிறுவனர் மருத்துவர் நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள் வெளியிட, முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் பெற்றுக்கொண்டார். கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 என்ற நூல் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், இலண்டன் தமிழ்மொழி கலைக் கழகத் தலைவர் திரு.சிவாபிள்ளை அவர்கள் வெளியிட, இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.விசாகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இப்போது, இந்த கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 என்ற இந்த நூல் இன்று ( 16.09.2016 ) வெளியிடப்படுகிறது. இதில் கட்டுரை கொடுத்துச் சிறப்பித்திருக்கும் கட்டுரையாளர்கள், திருக்குறளிலுள்ள அருமை பெருமைகளைக் கூறியதோடன்றி, இனி வருங்காலங்களில் திருக்குறளின்படி நடந்தால் மட்டுமே மனித இனம் காப்பாற்றப்படும் என்ற மிக முக்கமான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே திருக்குறளை மலையிலே கல்வெட்டிலே பதிப்பது என்பது காலத்தின் கட்டாயம்.
இதுபோன்ற வரலாற்றுப் பணிகளை செய்ய தொடர்ந்து எமக்கு ஊக்கமளித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், உலகின் நோய்களையெல்லாம் தீர்க்கவல்ல ஒரே மாமருந்து திருக்குறள் மட்டுமே என்ற நற்சிந்தனையைப் பரப்பி, எமக்கு அருளாசிபுரிந்துவரும், கோவை, சரவணம்பட்டி, கெளமார மடாலம் சிரவை ஆதீனம் தவத்திரு. முனைவர் குமரகுருபர சுவாமிகள் அவர்களுக்கும், தொடர்ந்து எமது செயல்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பேராசி வழங்கி வரும் கொவை, பேரூராதீனம் பெரிய சுவாமிகள் தவத்திரு இராமசாமி அடிகளார் அவர்களுக்கும், இளையபட்டம் தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர். மருதாச்சல அடிகளார் அவர்களுக்கும் எமது நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
கோவை கே எம் சி எச் மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் நல்ல.ஜி.பழனிச்சாமி, சிந்தனைக்கவிஞர் கவிதாசன், பெருந்துறை ஆர்.மாணிக்கம், ஈங்கூர் சேதுபதி, கோவையைச் சார்ந்த, பேராசிரியர் .ந.கணேசன், திரு .விவேகானந்தன், குறளடியான் அ. இராதாகிருட்டிணன், திரு.கனகசுப்ரமணியம், திரு.மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த திரு. கணேசன், திருச்சியைச் சேர்ந்த திரு.பேச்சிமுத்து, ஜெயங்கொண்டம் திரு.பன்னீர்செல்வம், வடமதுரை திரு.பிரசன்னா ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
பா.இரவிக்குமார்
நிறுவனர்
குறள் மலைச் சங்கம்
www.thirukkuralmalai.org
kuralmaisangam@gmail.com




Thursday 8 September 2016

Wednesday 7 September 2016

கல்வெட்டுகள் விழாவில் கோவை வேளாண்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்.இராமசாமி அவர்கள் உரை


கல்வெட்டுகள் விழாவில் கோவை வேளாண்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்.இராமசாமி அவர்கள் உரை


Friday 2 September 2016

திருக்குறள் கல்வெட்டுகள் அமைய உள்ள குறள் மலையை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ...



திருக்குறள் கல்வெட்டுகள் அமைய உள்ள குறள் மலையை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ...