Thursday, 2 November 2017

Loyola college conferece photos

கல்வெட்டில் திருக்குறள்
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களோடு மலையிலே கல்வெட்டுகளாக்கவேண்டும் என்று குறள் மலைச் சங்கம் அமைப்புகள் சார்பாக பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், என பல நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திவருகிறது. அரசுக்கு மனு அளித்தது முதல் மலையைத் தேர்ந்தெடுத்ததுவரை, சுமார் 15 ஆண்டுகளாகத் தொடர்பணியில் ஈடுபட்டுவருகிறோம். மாதிரிக்கல்வெட்டுகள் அமைத்தோம். மாவட்ட ஆட்சியர்களும், அரசு உயரதிகாரிகளும் ஆய்வு செய்துமுடித்தபின், நமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஒப்புதல் அளித்தார்கள். தொடர்ந்து முதல் குறளை மலையிலே கல்வெட்டிலே செதுக்கி, விண்ணிலிருந்து நம்மை வாழ்த்தும் அய்யன் திருவள்ளுவனுக்கு சமர்ப்பித்தோம்.
முதல் குறள் செய்திகள்
சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள மலையப்பாளையத்தில் உள்ள மலையில்  கல்வெட்டில் முதல் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. இதன் அரங்கேற்ற விழா 03.07.2016 அன்று நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ஆர்.மகாதேவன் தலைமை தாங்கினார். குறள்மலைச்சங்கத்தின் சார்பாக நாம் அனைவரையும் வரவேற்றோம்.                                                                திருக்குறளை கல்வெட்டில் பதிப்பதை, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நாள் இந்த நாள் ஆகும். திருக்குறளை தினமும் படிக்க வேண்டும். அதை புரிந்து கொண்டு, அதன்படி நாம் வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கு திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், மனதிலும் பதிய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். கற்றவர்கள் படித்து முடித்து விட்டு  
நூல் வெளியீடுகள்
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 1 என்ற நூல் கோவையில் கே.எம்.சி.எச்.நிறுவனர் மருத்துவர் நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள் வெளியிட, முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.                                                                       
பாகம் 2  நூல் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், இலண்டன் தமிழ்மொழி கலைக் கழகத் தலைவர் திரு.சிவாபிள்ளை அவர்கள் வெளியிட, இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.விசாகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
16.09.2016 அன்று திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பாகம் 3 என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.
04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட,  மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன் அவர்கள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் இயக்குநர் ரூட்ஸ் நிறுவனங்கள் கோவை, திரு.ஜி.சுந்தரராஜன் அவர்கள் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை தலைவர் திண்டுக்கல், முனைவர் வி.முத்து அவர்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் புதுவை ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.
மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் பேசும்போது, கி.மூ.300 ஆண்டுகளுக்கு முற்பட்டது நமது தமிழ் என்பது கீழடி ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது என்றார். இதுவே உலகின் முதல் மொழியாகவும் மூத்த மொழியாகவும் இருந்திருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட மொழியான தமிழில் இருக்கக்கூடிய நமது திருக்குறளை கல்வெட்டிலே உருவாக்குவது சாலச்சிறந்த பணி என்று பாராட்டிப் பேசினார், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பேசும்போது, சீவக சிந்தாமணியை மேற்கோள் காட்டி, திருக்குறளை கல்வெட்டில் பதிக்கவேண்டியதன் அவசியத்தை அவசியத்தை எடுத்துரைத்தார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் விசயராகவன் அவர்கள் பேசும்போது, இந்த குறள் மலைச் சங்கத்தின் செயல்கள் பிரமிக்கத்தக்கவை. ஒரு மலை முழுவதும் திருக்குறளை கல்லிலே பதித்து வைத்தல் என்பது காலத்தால் அழியாத ஒரு வரலாற்றுப் பணி. இந்த மலை ஈரோடு மாவட்டத்தில் அமைய உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். ஆகவே குறள்மலை உருவாகும் காலம் நெருங்கிகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.







































































No comments:

Post a Comment