Friday, 30 March 2018
Tuesday, 27 March 2018
Sunday, 25 March 2018
Friday, 23 March 2018
Thursday, 22 March 2018
Tuesday, 20 March 2018
Thursday, 15 March 2018
Wednesday, 14 March 2018
Tuesday, 13 March 2018
Sunday, 4 March 2018
திருக்குறள் கல்வெட்டுகள் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு link : https://youtu.be/Nj3fLytATro
திருக்குறள் கல்வெட்டுகள்மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு
link : https://youtu.be/Nj3fLytATro
திருக்குறள் கல்வெட்டுகள்..குறள்மலையில் மொரீசியஸ் துணை அதிபர்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள மலைப்பாளையத்தில் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசுகையில் ஒரு தமிழராக, இந்தியராக, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் யடைகின்றேன்
உலக பொதுமறையான திருக்குறள் தனி மனித ஒழுக்கத்திற்கான மிகச்சிறந்த வழிகாட்டுதல் நூல் ஆகும் இந்த நூல் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் ஆகும்
இதனை நம் வருங்கால சந்ததியினர்க்கு எடுத்துச்செல்ல மலையப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலை சுற்றி உள்ள பாறைகளில் 1330 குறள்களையும் விளக்கத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பதித்து குறள் மலை ஆக்குவதின் மூலம் காலத்தால் அழியா புகழை பெற்று வருங்கால சந்ததியர்களுக்கு வழிகாட்டியாக அமையும் இதற்கு உறுதுணையாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், குறள் மலை சங்க தலைவர் ரவிக்குமார் செயல்பட்டு வருகின்றனர் இதனை செயல்படுத்த முனையும் தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த காலத்தால் அழியாத பணிக்கு எங்கள் மொரீசியஸ் அரசின் முழு ஒத்துழைப்பு வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.
மொரீசியஸ் நாட்டில் தமிழர்கள் 12 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கில மொழி வழியாக கற்றுக்கின்றனர். இதனால் தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரம படுகின்றனர் எனவே மகாத்மா காந்தி பல்கலைகழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கை மொரிசியஸ் அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் தமிழர்கள் பண்டிகையான பொங்கல், சிவராத்திரி,ஏகாதேசி, உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன கல்வி, சுற்றுலா, வேளாண் துறைகளில் மொரீசியஸ் நாடு சிறந்து விளக்குகிறது என பெருமை பட பேசினார். தொடர்ந்து நான் தமிழ் மொழியை கற்று வருகின்றேன் என கூறினார் .இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரபாகர், குறள் மலை சங்க தலைவர் ரவிக்குமார், பேராசிரியர் வெற்றிவேல், கண்ணன், சமூக மேம்பாட்டு இயக்க உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்:
நம்பியூர் அருகேயுள்ள மலைப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலில் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டார். அருகில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Subscribe to:
Posts (Atom)